வெள்ளி, 7 நவம்பர், 2014

நாட்குறிப்பு

எனது நாட்குறிப்பேட்டில் அதிகமாக எழுதாபடாத பக்கங்கள் தான் இருக்கும், அப்படியே எழுதி இருந்தாலும் "இன்று குறிப்பிடும்படி எதவும் நடைபெறவில்லை" என்று தான் எழுதி இருக்கும்.

உண்மையில் எதுவும் எழுதப்படாத நாட்களில் தான், குறிப்பிடும்படியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். அப்படி குறிப்பிட மறந்தவைகளை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

ஒரு குறிப்பிற்கும், மற்றொரு குறிப்பிற்கும் சம்மந்தம் இல்லாமலும் இருக்கும், நிறைய சம்மந்தங்களும் இருக்கும்.
சில (உண்மையில் பெரும்பான்மையனவை) முட்டாள்தனமாககூட இருக்கும்.

என் முட்டாள்தனமான பேச்சை கேட்க யாரும் இல்லை. அப்படியே யாராவது கிடைத்தாலும், நான் பேச அரம்பித்ததும் தெறித்து ஓடுகிறார்கள்..

யாரிடமாவது கொட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காகதான் இந்த வலைபதிவை அரம்பித்து எழுத விழைந்துள்ளேன்.

தயவுசெய்து எழுத்தாளர்கள் எண்ணை மன்னிக்கவும்...