செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயற்கை ஆர்வலன்

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? நிச்சயமாக, நீங்கள் வேலை இல்லாதவர், உபயோகமான விடயங்கள் எதுவும் செய்யாதவர், பேசியே கழுத்தை அறுப்பவர் என்று இந்த சமுகத்தால் எண்ணப்ப்டுவீர்.உலகம் முழுவதுமே இயற்கை ஆர்வலர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகிறர்கள்.
நம் நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. இன்று ஆர்வலர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.10 வருடங்களுக்கு முன்பு இன்னும் மோசமாக இருந்தது.

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்களுக்கு தாவரவியல் பாடத்தை மேக நாதன் என்ற ஆசிரியர் எடுத்தார். அவர் இயாற்கை ஆர்வலரும் கூட. பாடத்தை வகுப்பில் மட்டும் நடத்தாமல், வெளியே அழைத்துச் சென்று பல புதிய தாவரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

எங்கள் பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில், தினம் ஒரு ஆசிரியர் மாணாக்கர்க்கு   தேவையான அறிவுரைகளை வழங்குவர். தாவரவியல் ஆசிரியர் முறை வந்தபோது இயற்கையின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதின் அவசியங்கள் குறித்து பேசினார். மிகச் சிலரை தவிர பெரும்பான்மையானவர்கள் அவரை கேலி செய்தனர். என்னை மிகவும் வருந்த செய்தது, ஆசிரியர்களே அவரை பின்னால் நின்று கேலி செய்தது.

மற்ற கல்வியுடன், சூழ் நிலையியல் குறித்த கல்வியையும் நம் பிள்ளைகளுக்கு, கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு தெரிந்து, சூழ் நிலையியல் முக்கியமான கேள்விகள் கேட்கப்படாத, ஒதுக்கப்பட்ட பாடமாகவே அவை உள்ளது. தேர்வுகளுக்காக அல்லாமல், தேவைகாக சூழ் நிலையியல் குறித்த கல்வி அவசியம்.

இயற்கை குறித்த புரிதலை நம் பிள்ளைகளுக்கு, அளிக்க தவறினால் எதிர்காலத் தலைமுறை காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

 நீங்களே முடிவெடுங்கள் நம் வருங்கால தலைமுறைக்கு நாய், பூனை, புலி, சிங்கம், பூச்சிகள், மரம், செடி, கொடிகளை நேரடியாக காட்டப் போகிறோமா? அல்லது கைப்பேசியிளா?
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக