வெள்ளி, 18 செப்டம்பர், 2015

கண்ணீரை விதைக்கிறவன்

"கண்ணீரை விதைக்கிறவன், கெம்பீரமாய் அறுக்கிறான்"

இந்த வாரம் நூலகத்திலிருந்து நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" என்ற சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். முதல் கதையே என் மனதையும், கண்களையும் கலங்க வைத்துவிட்டது. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும் முன் எத்தனை முறை அழுதேன் என்றே தெரியவில்லை. சில இரவுகள் தூக்கத்தில் கூட பாரதிகுமாரின் கதாபாத்திரங்களே வந்துபோயின.

தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனப்படுங்கொலை, உடல் மற்றும் மனரீதியாக மனிதர்கள் சித்ரவதை செய்யப்படுவது என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமக்கு நடக்காதவரை அவை வெறும் செய்திகள். சிறிய எதிர்வினை கூட ஆற்றுவதுயில்லை.

பிறர் துன்பங்களை தன்னுடையதுப் போல் பாவிக்கும் ஒரு மனிதனால்தான், காலவெளியை கடந்தும் நிலைத்து நிற்கும் படைப்புகளை படைக்க முடியும். அப்படியான ஒரு ஆக சிறந்த படைப்புதான் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்".

அனைத்து கதைகளுமே அருமையாக உள்ளது. ஒரு கதைக்கூட புனைவு என்று எண்ணத் தோன்றவில்லை. எல்லாமே நிஜ சம்பவங்களை அப்படியே எழுதியது போன்றே இருந்தது. மிக எதார்தமான சிறுகதைகள்.  முன்னுரையில் எழுதி இருப்பதைப் போன்றே, எனக்கும் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" படிக்கும் போது பாரதி ஒரு கிருத்துவராக இருப்பாரோ என்று தோன்றியது. "பிராது" படித்த போது இந்து மடங்களில் அதிகம்  இருந்தாரோ என்று தோன்றியது. " பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்" படித்த பிறகு அவர் ஒரு இஸ்லாமியர் என்றே நினைத்துக் கொண்டேன்.

 நான் அதிகம் ரசித்த சிறுகதைகள்  பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள், பிராது, அய்யனார் உறக்கப் பாட்டு, ஆடிஸம், பிடிபட்டவன், இந்திய சோறு, உள் மன ஓசைகள், பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்.

 நான் மிகவும் ரசித்த வரிகள்

"பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் " சிறுகதையில், கர்பாலாவில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 10 வயது சிறுமியின் தாய் சபித்தப்படி கூறுவாள், "எந்த பேரழிவைத் தந்துவிடும் அந்தக் கைகள் இருந்திருந்தால் என்று அவற்றைக் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள்." 

"அய்யனார் உறக்கப் பாட்டு" சிறுகதையில் அழகம்மையும், வேலாயிக் கிழவியும் பேசுகையில், அழகம்மை,"கல்யாணம் ஆகலைனா அய்யனாருதான் தொன, அவரையே கட்டிகிட்டதா நெனச்சி அப்படியே கெடக்கேன்"

கிழவி, " அடி செருப்பால, நீ கெட்ட கேட்டுகு அய்யனாரு கேக்குதா? ஆக்கங்கெட்ட மூத்... நீ பேசலடி நீ தின்ற பன்னிக் கொளுப்பு பேசுது... போ... போ...  தண்ணி மொண்டுகிட்டு பன்னி மேய்க்கப் போ... அதா ஒனக்கு கெதி"

அழகம்மை, "ஆண்டாலு ஆசபட்டா நியாயம், இந்த அழகம்ம ஆசபட்டா குத்தமா?

சுவரில் எழுதாதீர்கள் கதையில்,

குருடர்கள் பார்கிறார்கள்... செவிடர்கள் கேட்கிறார்கள்...

"என்னோடு சிறு பிராயத்தில் இருந்த ஊனமுற்ற சகோதரர்கள் இருக்கும் இல்லத்திலோ, மருத்துவமனைகளிலோ அற்புதங்கள் நிகழ்த்தாமல், அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தும் திடல்களில் ஏன் நிகழ்த்துகிறார்கள் என்ற கேள்வி உங்களைப் போல் எனக்கும் உண்டு".

பாரதிக் குமார் கெம்பீரமாகவே அறுவடை செய்திருக்கிறார்...


3 கருத்துகள்:

 1. மிக்க நன்றி ஜாஸ்வின்.. இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு யதார்த்தமாக வந்தேன் என்னுடைய பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக்குறிப்புகள் சிறுகதைத் தொகுப்புக் குறித்து உங்கள் வாசிப்பனுபவத்தை மிக அழகாக உணர்வுப்பூர்வமாக எழுதி இருந்தீர்கள் மிக்க நன்றி படித்ததும் நெகிழ்ந்தேன் .. முகம் அறியா வாசகனின் வரிகள்தான் நிஜமான வெளிப்பாடு என்பதே என் கருத்து.. மீண்டும் நன்றி ஜாஸ்வின்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதிக்குமார் அவர்களுக்கு, என் பதிவில் கருத்திட்டமைக்கு நன்றி. இப்பொழுதுதான் தாங்கள் இட்டக்கருத்தை நான் கான நேர்ந்தது.

   நான் வாசிக்கும் புத்தகங்கள் குறித்த வசிப்பனுபவங்களையும், விமர்சனங்களையும் எழுதவே இந்த வலைப்பூவை தொடங்கினேன். ஆனால், இதுவரை இரண்டு புத்தகங்களைப் பற்றி ம்ட்டுமே எழுதினேன்.

   தங்கள் இட்டக்கருத்து என்னை மீண்டும் புத்தகங்கள் குறித்து எழுத துண்டியுள்ளது.

   மிக்க நன்றி.

   நீக்கு
 2. மிக்க நன்றி ஜாஸ்வின்.. இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு யதார்த்தமாக வந்தேன் என்னுடைய பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக்குறிப்புகள் சிறுகதைத் தொகுப்புக் குறித்து உங்கள் வாசிப்பனுபவத்தை மிக அழகாக உணர்வுப்பூர்வமாக எழுதி இருந்தீர்கள் மிக்க நன்றி படித்ததும் நெகிழ்ந்தேன் .. முகம் அறியா வாசகனின் வரிகள்தான் நிஜமான வெளிப்பாடு என்பதே என் கருத்து.. மீண்டும் நன்றி ஜாஸ்வின்

  பதிலளிநீக்கு