நன்பர்கள்
என் பால்யக் காலத்தில் எனக்கு முதலில் கிடைத்தது, தோழிதான். என் சித்தியின் மகள்(அம்மாவின் தங்கை). நாங்கள் அம்மு என்று அழைப்போம். எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர் அவர்கள் பிறப்பதற்கு 3 வருடங்க்ளுக்கு முன்பே பிறந்துவிட்டதால், என் முதல் சகோதரியும், முதல் தோழியாகவும், அம்முவே ஆகிவிட்டார்.
என் அப்பாவின் வேலை நிமித்தம் நான் என் ஆயா (அம்மாவின் அம்மா) வீட்டில் வளர்ந்தேன். என் சித்தியின் வீடும் பக்கத்துத் தெருவிலே இருந்ததால் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே பள்ளி, என்னைவிட சிறியவள் என்பதால் வகுப்பு மட்டும் வேறு.
எங்கள் வீட்டில் ஆண், பெண் பாகுபாடு காட்டாமல், வளர்த்தார்கள். பெண் குழந்தைகளுக்குதான் எங்கள் வீட்டில் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தான் நான் பெண் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை சக மனிதியாக பார்க்க கற்றுக்கொண்டேன்.
இன்று நிறைய ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள நினைக்கும், ஆணாதிக்க மனோபாவம் அவன் குடும்பத்தில்தான் விதைக்கப்படுகிறது. அதை இந்த சமுகம், ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கிறது.
மற்றபடி, பள்ளியில் 2 தோழிகள். நான்காம் வகுப்புவரை இதுதான் என் நட்பு வட்டம். பிறகு, என் அப்பாவிற்கு என் சொந்த ஊரான ஆரணிக்கே மாற்றல் ஆனதால், நானும், ஆரணி வந்துவிட்டேன்.
6 வகுப்பு படிக்கும் போதுதான், என் பள்ளிக்கால நன்பர்கள் அறிமுகமானார்கள். இளையராஜா, மோகன், ராஜ ராஜன் என் நெருங்கிய நன்பர்கள். 7 ஆம் வகுப்பில் வினோத் எங்களுடன் சேர்ந்தான். 8 ல் யுவராஜ்.
10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். 11,12 ஆம் வகுப்புகளை நான் வேறுப் பள்ளியில் படித்தேன். அங்கு வேறு புதிய நன்பர்கள். ஆனந்த், பூபதி, செந்தில், புவனேஸ்வர், கோடீஸ்வரன், ராஜேஸ் என் பெரிய நன்பர்கள் வட்டமே இருந்தது. இன்று எவறுமே தொடர்பில் இல்லை. வினோத், யுவராஜ் மட்டும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக