கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் சம்புரு என்ற பகுதியில் உள்ள காட்டில் பரவி வரும் வதந்தியை பற்றி கேள்விப் பட்டு அங்கு வருகிறார் சாபா. ஒரு பெண் சிங்கம் ஆரிக்ஸ் குட்டியை தத்து எடுத்து உள்ளதாக கூறுகிறார்கள். அந்த சிங்கத்தின் பெயர் காமுன்யாக் (ஆசிர்வதிக்கப் பட்ட ஒன்று) ஆரிக்ஸ் என்பது ஒருவகையான மாண்.
வழித்தவறிப் போன குட்டியை உண்ணாமல், தத்து எடுத்து பாதுகாத்து வருகின்றது காமுன்யாக். அந்த குட்டி காமுன்யாகிடம் இருந்து விலகிச்செல்லும்போது, தன் குட்டிகளை அழைக்கும் போது ஏற்படுத்தும் ஒலிகளை எழுப்பி குட்டியை அழைத்தது.
மறு நாள்,
16 நாட்களுக்குபின், வேட்டையாடி தன் முதல் உணவை காமுன்யாக் உண்டது.
1 வருடத்திற்குப் பின்,
5 ஆரிக்ஸ் குட்டிகளை தத்தெடுத்துக் கொண்டது. அதில் ஒன்று பசியால் இறந்துவிடுகிறது. மற்றவை தப்பி ஓடிவிட்டது. கடைசி ஒன்றை காமுன்யாக் கைவிட்டுவிட்டது. அது தன் தாயிடமே சேர்ந்துவிடும்.அதன் பின் காமுன்யாகை யாரும் பார்க்கவில்லை.
எந்த விலங்கும் தன் இனத்தை தானே அழித்ததாக எந்த வரலாறும் இல்லை. அடுத்த உயிரைக்கூட பசிக்காகதான் கொல்கிறது. "பிரிடேடர்" என்று அழைக்கப்படும் சிங்கம் ஆரிக்ஸ் குட்டிகாக தன் இயல்பான குணம் வேட்டையாடுதலையே விட்டுவிட்டது. ஆனால் மனிதன் மட்டும் தன் சுய நலத்திற்காக, தன் இனத்தை தானே அழித்துக் கொண்டு இருக்கிறான். உலகத்தில் மிக கொடுரமான விலங்கு மனிதன்.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "விலங்கு பண்ணை" என்ற நாவலில் ஓல்டு மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி பேசும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.
"மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கிவிட்டுப் பாருங்கள், நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலக்காரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக